Monday, March 3, 2008

My inspiration for this blog is Preeti. My friend. What all you find in this blog is because of her and for her. You always need someone to give a break in your life. She is the one in my college life. A person who made it intresting than I have dreamed about it. Its because of her I learnt lot of hard truths about life and learnt to live with them. To live with pain was a new experience to me till I met this special person......and now it has become my way of life.........

Monday, October 15, 2007

நின் நிலை கண்டு கறைவதை
அறிவாயோ தோழி
உன் துனைக்காக ஆண்டவனை
அழைக்கின்றேன் தோழி
உயிர் காக்கும் நட்பினை
மறப்பேனோ தோழி
உன் வலிக்கான மருந்தினை
தந்துவிட்டேன் தோழி
ஆழ்மனதின் பாரத்தை என்னிடம்
விடு தோழி
கனம் தாழ்ந்த மனதோடு
இமை சேர்ப்பாய் தோழி...
நட்பாக வந்தாய் - மென் மனதை
என்னுடன் பகிற்ந்தாய்
நிலைபெயர்ந்து சென்றாய் - அடி மனதில்
முள்ளாய் வலி தந்தாய்...

உனக்காக...

உன் நினைவாக ஏற்றதை உனக்காக
துறக்கிறேன்
சிறு தூறலோடு என் வாழ்வை கடந்த
மேகக் கூட்டத்தில்
மற்றும் ஓர் முகிலையும் இனைக்கிறேன்...

Friday, August 10, 2007

நட்பு...

ஆயிரம் அலைகள் கடலோடு எழுந்தாலும்
கடலுக்கு பெருமை ஆழ்கடலின் முத்து.
ஆர்பரிக்கும் என்னங்கள் என்னுள் எழுந்தாலும்
என் மனதிற்கு வலிமை உந்தன் நட்பு...

Friday, August 3, 2007

அன்பு...

அன்பை நேசிக்கும் மனமே
அன்பு என்பது சிவமெனில்
நீ வெருத்து ஒதுக்கியது எது?
அது அன்பெனில் நீ நேசிக்கும் சிவம் எது?